
ஆடவர் வில்வித்தை ரிகர்வ் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீரர் பார்த் சலுன்கே சாதனை
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) அயர்லாந்தின் லிமெரிக்கில் நடந்த உலக இளைஞர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், 21 வயதுக்குட்பட்ட ஆடவர் ரிகர்வ் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் பார்த் சலுன்கே வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இந்த சாதனையை படைத்த முதல் இந்திய ஆண் வில்வித்தை வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தென்கொரிய வீரர் சாங் இன் ஜூனை எதிர்த்துப் போராடிய பார்த் சலுன்கே 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு போட்டியில், 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனிநபர் பிரிவில், இந்தியாவின் பஜன் கவுர் 7-1 என்ற கணக்கில் சீன தைபேயின் சு சின்-யுவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
Priyansh won gold in compound category
காம்பவுண்ட் பிரிவில் உலக சாம்பியன் ஆனார் பிரியான்ஷ்
சனிக்கிழமை (ஜூலை 8) நடந்த போட்டியில், இந்தியாவின் பிரியான்ஷ் 21 வயதுக்குட்பட்ட வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் உலக சாம்பியன் ஆனார். அவர் ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பிரெங்கை 147-141 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
மகளிர் காம்பவுண்ட் பிரிவில் 18 வயத்துக்குட்பட்டோருக்கான போட்டியில், இந்தியாவின் அதிதி சுவாமி 142-136 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மொத்தமாக ஜூலை 3 முதல் 9 வரை நடந்த போட்டியில், இந்திய அணி ஆறு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை குவித்து, பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
ஆறு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிகளை வென்ற தென்கொரியா முதலிடம் பிடித்தது.