பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற இந்தியா vs ஸ்பெயின் இடையேயான ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் போராடி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் வென்றது. முன்னதாக 2020 ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வெற்றியின் மூலம், 52 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டு முறை பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.