ஒலிம்பிக் 2024: 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ரமிதா ஜிண்டால்
செய்தி முன்னோட்டம்
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால், பதக்கச் சுற்றுக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாளரிவன் ஆட்டம் இழந்ததை அடுத்து, ரமிதா ஜிண்டால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மனு பாக்கருக்கு அடுத்தபடியாக, கடந்த 20 ஆண்டுகளில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமை ரமிதாவுக்கு கிடைத்துள்ளது.
மேலும், தனது பயிற்சியாளர் சுமா ஷிரூருக்குப் பிறகு(ஏதென்ஸ் 2004) ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெயரும் ரமிதாவுக்கு கிடைத்துள்ளது.
ஒலிம்பிக்
தரவரிசையில் 5வது இடத்தை பிடித்த ரமிதா
ரமிதா தரவரிசையில் 5வது இடத்தை பிடித்து பதக்க சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
இன்றைய சுற்று நடைபெற்ற போது பாதி வரை இளவேனில் முன்னிலை வகித்தார், ஆனால் பாதி விளையாட்டு பிறகு, அடுத்த 3 தொடர்களில் அவர் பின்தங்கி, தகுதிச் சுற்றில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கொரியாயை சேர்ந்த பான் ஹியோஜின் 634.5 புள்ளிகளுடன் வென்று ஒலிம்பிக் தகுதிச் சாதனையை படைத்துள்ளார்.
மேலும், 10மீ ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால், இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளார்.