பானி பூரி விற்பனை முதல் ஐபிஎல் வரை : யஜஸ்வி ஜெய்ஸ்வாலின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
ஐபிஎல் தொடர் அவ்வப்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தாலும், இது வெற்றிபெற்ற இளம் கிரிக்கெட் வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளின் பொக்கிஷமாக உள்ளது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்30) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்களை அடித்து சமீபத்திய ஒளிரும் நட்சத்திரமாக மாறியுள்ளார். தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தில் உள்ள பதோஹியில் இருந்து மும்பைக்கு கிரிக்கெட் பயிற்சிக்காக சென்ற ஜெய்ஸ்வால் பானி பூரி கூட விற்றுள்ளார். பானி பூரி விற்பனையிலிருந்து இந்த இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு இடைவிடாத முயற்சியும் பயிற்சியும் காரணம் என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெய்ஸ்வால் பானி பூரி விற்கும் பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.