LOADING...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான்! டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு
2026 டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான்! டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார். பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், கேப்டன் பொறுப்பு சல்மானிடம் வழங்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அணி

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வீரர்கள் பட்டியல்: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், கவாஜா முகமது நஃபே (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான் (விக்கெட் கீப்பர்), சயீம் அயூப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்) மற்றும் உஸ்மான் தாரிக்.

போட்டிகள்

குரூப் ஏ மற்றும் முதல் போட்டி

இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

முடிவு

தேர்வுக் குழுவின் முடிவு

பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர் ஆகிப் ஜாவேத் ஆகியோர் முன்னிலையில் இந்த அணி அறிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் நிலவிய கேப்டன்சி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சல்மான் அலி ஆகாவைத் கேப்டனாகத் தேர்ந்தெடுத்து புதிய பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

Advertisement