கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்; ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாத பின்னணி தெரியுமா?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக ஒயிட் பால் கிரிக்கெட்டில் கடைசியாக 2016இல் வியாதியா ஸ்டூவர்ட் பிராட், அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 840 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 600 விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். கிரிக்கெட்டின் ஜாம்பவான்களின் ஒருவராக திகழ்ந்தாலும், அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒருபோட்டியில் கூட விளையாடியதில்லை.
ஐபிஎல்லில் ஸ்டூவர்ட் பிராடின் பின்னணி
ஐபிஎல்லைப் பொறுத்தவரை ஸ்டூவர்ட் பிராட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஒரு பகுதியாக இருந்தார் என்பது சில ரசிகர்களுக்குத் தெரியும். பஞ்சாப் அணி அவரை முதன்முதலில் ஐபிஎல்லில் ஏலத்தில் எடுத்தாலும், உலகக்கோப்பையின் போது பணிச்சுமை காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. எனினும், பிராட் மீது நம்பிக்கை வைத்த பஞ்சாப் அணி அடுத்த ஆண்டும் அவரை தக்கவைத்தது. ஆனால் இந்த முறை மீண்டும் காயம் காரணமாக அவர் வெளியேறினார். அதன் பிறகு அவர் ஐபிஎல்லில் எந்த ஒப்பந்தத்தையும் பெறவில்லை. முன்னதாக, ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது போட்டிக்கு மத்தியில், சனிக்கிழமை (ஜூலை 29), இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.