இதே நாளில் அன்று : இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
கொரோனா பயம் காரணமாக 2021 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட இறுதி டெஸ்டில் ஜூலை 5, 2022இல் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி, பட்டோடி டிராபியை இங்கிலாந்து தக்கவைத்த தினம் இன்று.
இந்த போட்டி மற்ற போட்டிகளை போல் வழக்கமான ஒன்றாக இல்லாமல், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கு தேவையான 378 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்தனர்.
முன்னதாக, போட்டியின் முதல் இன்னிங்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சதங்கள் மூலம் 416 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களில் வீழ்ந்த நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்கள் எடுத்தது.
england created record
ஜானி பேர்ஸ்டோ - ஜோ ரூட் கூட்டணியில் இலக்கை எட்டிய இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதால் வெல்வது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி அமைத்து இருவரும் தனித்தனியாக சதங்களை கடந்து அணிக்கும் வெற்றியைத் தேடித்தந்தனர். ஜானி பேர்ஸ்டோ முதல் இன்னிங்ஸிலும் சதமடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து தொடரை 2-2 என சமன் செய்து, முந்தைய சீசனில் பெற்ற பட்டோடி கோப்பையை தக்கவைத்தது.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு அணியாலும் செய்யப்பட்ட அதிகபட்ச சேசிங் ஆக இது வரலாற்றில் பதிவாகியது.
1977ல் ஆஸ்திரேலியா 339 ரன்களை சேஸ் செய்ததே இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது.