ரூ.275 பள்ளிக்கட்டணத்தை கட்ட முடியாத நிலை; ரோஹித் ஷர்மாவின் பின் இப்படியொரு நெகிழ்ச்சி பிளாஷ்பேக்கா!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். கேப்டனாக மட்டும் அல்லது பல ஆண்டுகளாக இந்திய பேட்டிங் வரிசையின் முக்கிய அங்கமாக இருந்து வரும் ரோஹித் ஷர்மா, ஒயிட்பால் கிரிக்கெட் வரலாற்றில் ஹிட்மேன் என்ற பெயரை எடுத்துள்ளார். உண்மையில், ரோஹித்தின் நட்சத்திரப் பயணம் 1999இல் அவரது வாழ்க்கையை மாற்றிய ஒரு பிரச்சனையுடன் தொடங்கியது. அது என்ன? ரோஹித் தனது பள்ளி நாட்களில் ஒரு ஆஃப் ஸ்பின்னராக இருந்தார் மற்றும் ஒரு போட்டியின் போது, அவரது செயல்திறன் மும்பை கிரிக்கெட் வீரர் சித்தேஷ் லாட்டின் தந்தையான பயிற்சியாளர் தினேஷ் லாட்டின் கண்ணில் பட்டது.
ஸ்காலர்ஷிப்பில் படித்த ரோஹித் ஷர்மா
ரோஹித்தின் ஆட்டத்தால் மிகவும் தினேஷ் லாட், கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து பெற்றோரிடம் பேச விரும்பினார். மும்பையின் போரிவலி பகுதியில் ரோஹித் தனது மாமா மற்றும் தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்தார். அவரது மாமா லாட்டை சந்திக்க வந்தபோது, ரோஹித்தை சுவாமி விவேகானந்தர் பள்ளியில் சேர்க்குமாறு தினேஷ் லாட் வலியுறுத்தினார். ஆனால் ரோஹித் அப்போது படித்த பள்ளியில் ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், அவர்களால் ரூ. 275 கட்டணத்தை செலுத்த முடியாது என்றும் அவரது மாமா கூற, தினேஷ் லாட் பள்ளி இயக்குனரிடம் பேசி இலவச உதவித்தொகை பெற்றுக் கொடுத்துளளார். அதன்பிறகு தினேஷ் லாட்டின் கீழ் சிறப்பாக பயிற்சி பெற்று, யு-19 மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி, பின்னர் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தார்.