Page Loader
NZvsSA : தென்னாப்பிரிக்கா அபாரம்; 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி
190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி

NZvsSA : தென்னாப்பிரிக்கா அபாரம்; 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 01, 2023
09:32 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 1) நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக் 114 ரன்களும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 133 ரன்களும் குவித்து அபாரமாக விளையாடினர். அதைத் தொடர்ந்து டேவிட் மில்லரும் தன் பங்கிற்கு 53 ரன்கள் சேர்க்க, அந்த அணி இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சைப் பொறுத்தவரை, டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

South Africa beats New Zealand by 190 runs

கேசவ் மகாராஜ் அபரா பந்துவீச்சு

358 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ராச்சின் ரவீந்திராவும் 9 ரன்களில் வெளியேற நியூசிலாந்தின் நிலைமை மோசமானது. அடுத்து ஜோடி சேர்ந்த வில் யங் (33) மற்றும் டேரில் மிட்செல் (24) சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், அவர்களும் விரைவில் அவுட்டாகினர். அதன் பின் வந்தவர்களில் கிளென் பிலிப்ஸ் மட்டும் கடைசி வரை போராடி 60 ரன்கள் சேர்த்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே ரன் குவித்து அவுட்டாக, இறுதியில் 167 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.