
இத்தாலி ஓபன் போட்டியின் போது தாக்கப்பட்ட நோவக் ஜோகோவிச்; அதன் பின்னர் கூறியது என்ன?
செய்தி முன்னோட்டம்
மே 12, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி ஓபன் 2024 போட்டித்தொடரில் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், அலெஜான்ட்ரோ டேபிலோவிடம் 2-6, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவரின் பையில் இருந்த பாட்டில், நோவக் ஜோகோவிச்சின் தலையின் மீது விழுந்தது. ஒரு நிமிடம் அதிர்ந்த அவர், பின்னர் சுதாரித்துக்கொண்டார்.
அடுத்த நாள் போட்டிக்கு அவர் வேடிக்கையாக தலையில் ஹெல்மெட் உடன் வந்த சம்பவம் வைரலானது.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு ஏற்பட்ட காயத்தின் அளவை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
நோவக் ஜோகோவிச்
Novak Djokovic was asked if getting hit on the head with the bottle impacted his tennis today after his loss to Tabilo
— The Tennis Letter (@TheTennisLetter) May 12, 2024
“Was this related at all to the bottle incident? Were you feeling anything from what happened on Friday night?”
Novak: “I don't know, to be honest. I have to… pic.twitter.com/CSFh4ApT3I
ட்விட்டர் அஞ்சல்
ஹெல்மெட்டோடு வந்த நோவக் ஜோகோவிச்
After getting hit on the head with a bottle yesterday, Novak Djokovic arrives to the tournament in Rome wearing a helmet 😂
— The Tennis Letter (@TheTennisLetter) May 11, 2024
Leave it up to Novak to turn this into comedic gold.
The Joker is ready for anything .
pic.twitter.com/TBLSGjQY1j