Page Loader
கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் யாரும் எட்டாத சாதனை படைத்த நோவக் ஜோகோவிச்
நோவக் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் யாரும் எட்டாத சாதனை படைத்த நோவக் ஜோகோவிச்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2024
07:26 pm

செய்தி முன்னோட்டம்

யுஎஸ் ஓபன் 2024இல் செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் யாரும் எட்டாத வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். புதனன்று (ஆகஸ்ட் 28) இரண்டாவது சுற்றில் அவருக்கு எதிராக போட்டியிடவிருந்த லாஸ்லோ டிஜெர் காயம் காரணமாக விலகியதால், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் யுஎஸ் ஓபன் வரலாற்றில் 90 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இதன் மூலம், அனைத்து விதமான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் தலா 90 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை நோவக் ஜோகோவிச் படைத்துள்ளார். அவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபனில் 94, பிரெஞ்சு ஓபனில் 96 மற்றும் விம்பிள்டன் ஓபனில் 97 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நோவக் ஜோகோவிச் சாதனை