Page Loader
'கோலியின் அந்த வாழ்க்கையை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க' : மனம் திறந்த மூத்த வீரர் இஷாந்த் ஷர்மா!
விராட் கோலியுடனான இளவயது நட்பை பகிர்ந்த இஷாந்த் ஷர்மா

'கோலியின் அந்த வாழ்க்கையை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க' : மனம் திறந்த மூத்த வீரர் இஷாந்த் ஷர்மா!

எழுதியவர் Sekar Chinnappan
May 19, 2023
06:02 pm

செய்தி முன்னோட்டம்

மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியுடனான தனது நெருங்கிய பிணைப்பு குறித்து பேசியுள்ளார். டெல்லியில் பிறந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் இளம் வயதிலேயே ஒன்றாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியிலும் இருவரும் சிறந்த தோழமையுடன் உள்ளனர். வியாழக்கிழமை (மே 18) டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியின் போது இருவரும் கடைசியாக ஐபிஎல்லில் நேருக்கு நேர் மோதியபோது, எதிரெதிர் முகாமில் விளையாடினர். ஆட்டத்திற்குப் பிறகு அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் இஷாந்த் ஷர்மா அக்சர் படேல் மற்றும் கோலியுடன் சேர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

ishant sharma speaks about other side of virat kohli

யு17 அணியில் விளையாடியதை நினைவுகூர்ந்த இஷாந்த் ஷர்மா

இஷாந்த் ஷர்மா மேலும் கோலியுடன் யு17 அணியில் ஒன்றாக விளையாடிய தருணங்களை நினைவுகூர்ந்து விராட் கோலியின் மேற்கு டெல்லி பக்கத்தை பலர் பார்த்ததில்லை என்று கூறினார். டெல்லி கேப்பிடல்ஸ் போட்காஸ்டில் பேசியபோது, "விராட் கோலி இப்போது மிகவும் நல்லவராகவும் அதிநவீனமாகவும் இருக்கிறார். அவரது மேற்கு டெல்லி வாழ்க்கையை பலர் பார்த்ததில்லை. நாங்கள் கொல்கத்தாவில் 17 வயதுக்குட்பட்டோர் அணியில் சேர்ந்து விளையாடினோம். அப்போது எங்களிடம் அதிக பணம் இல்லை. அங்கு நாங்கள் முட்டை ரோல்களை சாப்பிட்டு, பயிற்சிக்கு பிறகு குளிர்பானம் அருந்தி, அதை ரசிப்போம். விராட்டின் அந்த பக்கத்தை நான் பார்த்திருக்கிறேன்." என்று கூறினார்.