LOADING...
ஐபிஎல் 2026: ஜடேஜா மட்டுமில்லையாம்; சிஎஸ்கே அணியில் 5 முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டம்
சிஎஸ்கே அணியில் 5 முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டம்

ஐபிஎல் 2026: ஜடேஜா மட்டுமில்லையாம்; சிஎஸ்கே அணியில் 5 முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 10, 2025
12:30 pm

செய்தி முன்னோட்டம்

வரவிருக்கும் 19வது இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசனுக்காக அனைத்துப் பத்து உரிமையாளர்களும் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து விவாதித்து வருகின்றனர். இதில், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, கடந்த சீசனில் (ஐபிஎல் 2025) கடைசி இடத்தைப் பிடித்ததால், அணியில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. புதிய சீசனுக்கு முன்னதாக, சிஎஸ்கே விடுவிக்க வாய்ப்புள்ள ஐந்து முக்கிய வீரர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

ரவீந்திர ஜடேஜா

சஞ்சு சாம்சனை வாங்க ரவீந்திர ஜடேஜாவை வர்த்தகம் செய்ய திட்டம்

அணியின் மூத்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸுடன் நடைபெறும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாகச் சென்னைக்கு வரலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வர்த்தகம் உறுதியானால், ரவீந்திர ஜடேஜா அணியை விட்டு வெளியேறுவார். இங்கிலாந்தின் நட்சத்திர ஆல் ரவுண்டரான சாம் கரனும் இந்த ரவீந்திர ஜடேஜா- சஞ்சு சாம்சன் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த சீசனில் ₹3.4 கோடிக்கு வாங்கப்பட்ட ராகுல் திரிபாதி, ஐந்து போட்டிகளில் வெறும் 55 ரன்களை மட்டுமே எடுத்ததால், இவரது சுமாரான ஆட்டம் வெளியேற்றத்திற்குக் காரணமாக அமையலாம்.

விஜய் சங்கர்

விஜய் சங்கரை விடுவிக்க காரணம்

சிஎஸ்கே அணியால் கடந்த ₹1.2 கோடிக்கு வாங்கப்பட்ட 34 வயதான விஜய் சங்கர், அணியின் எதிர்காலத் திட்டங்களில் இல்லாததால், புதிய திறமைகளைச் சேர்க்கும் நோக்கில் இவரும் விடுவிக்கப்படலாம். கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத ஸ்ரேயாஸ் கோபால், ₹30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட நிலையில், இவரும் அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதிக வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே, இந்தப் பெரிய மாற்றங்கள் மூலம் அடுத்த சீசனுக்குப் புத்துணர்ச்சியுடன் திரும்புமென எதிர்பார்க்கப்படுகிறது.