LOADING...
நார்வே செஸ் தொடரில் சரித்திர சாதனை படைத்த பிரக்ஞானந்தா; விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு உலகமே வியக்கும் மேஜிக்
நார்வே செஸ் தொடரில் சரித்திர சாதனை படைத்த பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரில் சரித்திர சாதனை படைத்த பிரக்ஞானந்தா; விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு உலகமே வியக்கும் மேஜிக்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2026
10:16 am

செய்தி முன்னோட்டம்

நார்வேயில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற 'நார்வே செஸ் 2026' தொடரின் 8-வது சுற்றில், சென்னையைச் சேர்ந்த 20 வயதான இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். நடப்புத் தொடரின் 4-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, தற்போது 8-வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே இரண்டாவது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சாதனை

19 ஆண்டுகளுக்குப் பின் ஆனந்தின் சாதனையைச் சமன் செய்த பிரக்ஞானந்தா

செஸ் வரலாற்றில் கடந்த 19 ஆண்டுகளில், ஒரே கிளாசிக்கல் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற லினாரெஸ் சர்வதேச செஸ் தொடரில் இந்தியச் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை வீழ்த்தியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரக்ஞானந்தா இந்த அரிய சாதனையைச் சமன் செய்துள்ளார்.

வெற்றி

பதற்றமடையாத பிரக்ஞானந்தா

இந்த இமாலய வெற்றி குறித்துப் பேசிய பிரக்ஞானந்தா, "மேக்னஸை வீழ்த்துவதை விட, தொடரின் இந்த முக்கியமான கட்டத்தில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறுவது தான் எனக்கு முக்கியம். அதைச் செய்ததில் மகிழ்ச்சி" என்று மிகவும் நிதானமாகப் பதிலளித்துள்ளார். கார்ல்சனின் தற்காப்பு ஆட்டத்தைப் பாராட்டிய அவர், "கார்ல்சன் மிகவும் அழுத்தமான சூழலிலும் மிகச் சிறந்த நகர்வுகளை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் இந்த ஆட்டம் டிரா ஆகிவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால், இறுதி நேரத்தில் அவர் அவ்வாறு தவறிழைத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்று கூறினார். மேலும், தனது நேர மேலாண்மையை அடுத்தடுத்த சுற்றுகளில் மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement