Page Loader
நியூசிலாந்து அணி அபாரம் : இலங்கைக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

நியூசிலாந்து அணி அபாரம் : இலங்கைக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 05, 2023
01:46 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்தின் டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 19 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா 37 ரன்களும், குஷால் பெரேரா 35 ரன்களும் அசலங்கா 24 ரன்களும் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் ஆடம் மில்னே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டிம் சீஃபர்ட்

நியூசிலாந்தின் டிம் சீஃபர்ட் அரைசதம்

142 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட் பௌஸ் மற்றும் டிம் சீஃபர்ட் களமிறங்கினர். சாட் பௌஸ் அதிரடியாக ஆடினாலும், 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அவர் வெளியேறும் வரை பொறுமையாக ஆடிவந்த சீஃபர்ட் அதன் பிறகு இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 14.4 ஓவர்களிளேயே நியூசிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். சீஃபர்ட் கடைசி வரை அவுட்டாமல் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 79 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்துவீசிய ஆடம் மில்னே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து மற்றும் இலங்கை 1-1 என்ற சமநிலையில் உள்ளது.