Page Loader
மீண்டும் களமிறங்கும் கேன் வில்லியம்சன்; வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

மீண்டும் களமிறங்கும் கேன் வில்லியம்சன்; வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 17, 2023
12:38 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேச கிரிக்கெட் அணியுடன் நடந்து வரும் ஒருநாள் தொடர் முடிந்த பிறகு, டிசம்பர் 27 முதல் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான 13 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு சிறிய ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அணியின் கேப்டனாக இந்த தொடரில் களமிறங்க உள்ளார். மேலும் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷமும் இந்த தொடரில் பங்கேற்கிறார். இதற்கிடையே, லாக்கி பெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி மற்றும் ஹென்றி ஷிப்லி ஆகியோரும் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ராச்சின் ரவீந்திரா இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.

New Zealand announces T20I Squad for Bangladesh Series

போட்டி அட்டவணை மற்றும் அணி வீரர்களின் பட்டியல்

நியூசிலாந்தில் டிசம்பர் 27 முதல் நடைபெறும் மூன்று டி20 போட்டிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இதன்படி முதல் போட்டி டிசம்பர் 27இல் மெக்லீன் மைதானத்திலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே டிசம்பர் 29 மற்றும் 31இல் பே ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளன. டி20 தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணி : கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட், இஷ் சோதி, டிம் சவுத்தி.