Page Loader
தற்செயலாக ஈட்டி எறிதலில் நுழைந்து சாதனை நாயகமான மாறிய நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை
தற்செயலாக ஈட்டி எறிதலில் நுழைந்து சாதனை நாயகமான மாறிய நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை

தற்செயலாக ஈட்டி எறிதலில் நுழைந்து சாதனை நாயகமான மாறிய நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2023
04:03 pm

செய்தி முன்னோட்டம்

ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார். இதன் மூலம் 25 வயதில் டையமண்ட் லீக், ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப் என ஈட்டி எறிதலில் மதிப்பு மிகுந்த மூன்று முக்கிய பதக்கங்களையும் கைப்பற்றி விட்டார். ஆனால் ஈட்டி எறிதலில் அவர் நுழைந்தது ஒரு தற்செயலான செயல் என்றால் நம்ப முடிகிறதா? ஈட்டி எறிதலில் தற்செயலாக நுழைந்து சாதனை நாயகனாக நீரஜ் சோப்ரா மாறிய பின்னணியை இந்த பதிவில் பார்க்கலாம்.

neeraj chopra joined javelin throw at age 14

ஈட்டி எறிதல் விளையாட்டில் சேர்ந்தது எப்படி?

ஹரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா 2011 ஆம் ஆண்டில், தனது 14 வயதில் 85 கிலோ எடையுடன் மிகவும் உடல் பருமனாக இருந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி அவரை ஜிம்மில் சேர வைத்தனர். ஹரியானா மாநிலம் காந்த்ராவில் உள்ள தனது கிராமத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள பானிபட் பகுதிக்கு ஜிம் பயிற்சிக்காக செல்வது அவரது வழக்கமாக இருந்து வந்தது. அப்போது ஜிம்மிற்கு செல்லும் வழியில், சிவாஜி மைதானத்திற்குச் சென்றார். அங்கு அவர் தேசிய அளவிலான ஈட்டி எறிதல் வீரரான ஜெய்வீரின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஈட்டி எறிந்தார்.

securing medals from various competitions

பதக்கங்களை வாரிக்குவித்த நீரஜ் சோப்ரா

ஜெய்வீர் நீரஜ் சோப்ராவிடம் உள்ள திறமையை உணர்ந்து அவரை ஊக்கப்படுத்த, அதன் பின்னர் நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து ஏற்றமாக அமைந்தது. 2015 வாக்கில், சர்வதேச தரத்தில் 80 மீட்டர் தூரத்தை எட்டினார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டிற்குள், அவர் 20 வயதுக்குட்பட்டோர் மட்டத்தில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். 2017ல் ஆசிய சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 2018 இல், அவர் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். அதன் பிறகு தொடர்ந்து ஏற்றங்களை பெற்று வந்த அவர், ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

injury and come back

காயம் மற்றும் எழுச்சி

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்திற்கான இந்தியாவின் விருப்பமான போட்டியாளராக அவர் உருவெடுத்தபோது, ​2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக, முழங்கையில் பிரச்சினையை எதிர்கொண்டார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து நான்கு மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் திரும்பினார். அதன் பின்னர், தனது பழைய ஃபார்மை மீட்டெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தாலும், முழுத்திறனுடன் வந்து 2021 ஒலிம்பிக்கில் 87.58 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரண்டாவது தங்கமும் தடகளத்தில் (கள நிகழ்வுகள்) தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

first indian secures three medals

மூன்று பதக்கங்களையும் வென்ற முதல் இந்திய வீரர்

ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு, 2022 டையமண்ட் லீக்கில் போட்டியிட்டு தங்கம் வென்றதோடு 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து தனது அதிகபட்ச தூரத்தை பதிவு செய்தார். 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா அதில் வெள்ளி வென்ற நிலையில், இந்த முறை மீண்டும் முயற்சி செய்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுள்ளார். மேலும், அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு, ஒரே நேரத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கொண்டுள்ள வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். 25 வயதிலேயே அனைத்து முக்கிய பதக்கங்களையும் கைப்பற்றிவிட்ட நீரஜ், எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் மேலும் பல சாதனைகளை செய்வார் என்பது நிச்சயம்.