Page Loader
தோஹா டயமண்ட் லீக்கில் மீண்டும் களம் காணும் நீரஜ் சோப்ரா
தோஹா டயமண்ட் லீக்கில் மீண்டும் களம் காணும் நீரஜ் சோப்ரா

தோஹா டயமண்ட் லீக்கில் மீண்டும் களம் காணும் நீரஜ் சோப்ரா

எழுதியவர் Sekar Chinnappan
Apr 13, 2023
07:58 pm

செய்தி முன்னோட்டம்

ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மே 5 ஆம் தேதி தோஹாவில் நடைபெறும் டயமண்ட் லீக் போட்டியில் விளையாட உள்ளார். 25 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த செப்டம்பரில் கிராண்ட் பைனலை வென்ற பிறகு, டயமண்ட் லீக் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார். உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச் ஆகியோருடன் இதில் மோத உள்ளார். கடந்த ஆண்டு ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் கூட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சோப்ரா, 89.94 மீ என்ற தனிப்பட்ட சாதனையைப் பெற்றுள்ளார்.

neeraj chopra to open season in doha diamond league

2022 டயமண்ட் லீக்கில் விளையாடாத நீரஜ் சோப்ரா

இந்திய ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் 2022 தோஹா டயமண்ட் லீக் கூட்டத்தை காயம் காரணமாக தவறவிட்டார். அதில் பீட்டர்ஸ் 93.07 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து பட்டம் வென்றார். இது உலக ஈட்டி எறிதல் வரலாற்றில் ஐந்தாவது நீளமான எறிதலாகும். உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற வாட்லெஜ் 90.88 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த ஆண்டு களம் காணும் நீரஜ் சோப்ரா, 90 மீட்டருக்கும் மேல் வீசுவதை இலக்காக கொண்டுள்ளார். இதற்காக தற்போது துருக்கியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு ஏப்ரல் 31 வரை தங்கி பயிற்சியில் ஈடுபடுவார்.