Page Loader
ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி : அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்
ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி : அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்

ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி : அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 31, 2023
01:25 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க ஆட்டத்தில் நான்கு முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) வெள்ளிக்கிழமை (மார்ச் 31) எதிர்கொள்கிறது. அகமதாபாத்தின் பிரம்மாண்டமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த மோதல் நடக்க உள்ளது. குஜராத் அணி இந்த சீசனில் விளையாட உள்ள 14 லீக் போட்டிகளில் 7 போட்டிகளை சொந்த மைதானமான அகமதாபாத்தில் 7 போட்டிகளில் விளையாட உள்ளனர். முன்பு மோதீரா ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்ட இந்த மைதானம் 1,10,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 2015 ஆம் ஆண்டில், புனரமைப்புக்காக மைதானம் இடிக்கப்பட்டது மற்றும் 2021 இல் மீண்டும் திறக்கப்பட்டது.

நரேந்திர மோடி மைதானம்

நரேந்திர மோடி மைதானத்தில் டி20 போட்டிகளின் புள்ளி விபரங்கள்

இந்த மைதானத்தில் இதுவரை ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளை சேர்த்து மொத்தமாக 10 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளன. சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160 ஆகும். மேலும் 2021 முதல் 20 டி20 போட்டிகள் இங்கு விளையாடப்பட்டுள்ளன. மேலும் சேசிங் செய்தபோது 13 முறை அணிகள் வெற்றி பெற்றுள்ளன. கடந்த மாதம், நியூசிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா 234/4 ரன்களை எடுத்ததுதான் ஒரு அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரான சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்தார். இந்த மைதானத்தில் தனிநபர் டி20யில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.