10 நாட்களாக ஐசியூவில் இருந்த தந்தை! கஷ்டத்திற்கு மத்தியிலும் எல்எஸ்ஜிக்கு வெற்றி தேடித்தந்த மொஷின் கான்!
ஐபிஎல் 2023 தொடரின் 63வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 16) மும்பை இந்தியன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொஷின் கான் செவ்வாயன்று தனது செயல்திறனை 10 நாட்கள் ஐசியுவில் கழித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தனது நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு அர்ப்பணித்தார். இதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற கடைசி ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகள் மீதமிருக்க 11 ரன்கள் மட்டுமே தேவை என இருந்த நிலையில், மொஷின் கான் அபாரமாக பந்துவீசி ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
தந்தை குறித்து உருக்கமாக பேசிய மொஷின் கான்
போட்டிக்கு பின்பு பேசிய மொஷின் கான், "நேற்று தான் என் தந்தை ஐசியூவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். இந்த ஆட்டத்தில் எனது செயல்திறனை தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் இதை பார்த்துக் கொண்டிருப்பார். கடந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடாவிட்டாலும், எனக்கு துணையாக இருந்த கௌதம் கம்பீர், விஜய் தஹியாவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இறுதி ஓவரை பொறுத்தவரை நான் எனது திட்டத்தை செயல்படுத்த க்ருனால் பாண்டியா உதவியாக இருந்தார். ஸ்கோர் போர்டை பார்க்காமல் 6 பந்துகளையும் வீசி முடித்தேன்." என்று தெரிவித்துள்ளார்.