
ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
வான்கடே மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2025 தொடரின் பிளேஆஃப் சுற்றுக்குள் இறுதி இடத்தைப் பிடித்தது.
கிட்டத்தட்ட காலிறுதி போல் நடந்த இந்த ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் மற்றும் நமன் தீர் ஆகியோரின் ஆட்டம் மும்பை அணிக்கு சாதகமாக அமைந்தது.
முதல் 18 ஓவர்களில் மெதுவாக மும்பை இந்தியன்ஸ் மெதுவாக ரன் சேர்த்தாலும், இந்த ஜோடி 21 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
முகேஷ் குமாரின் கடைசி ஓவரில் 27 ரன்களும், துஷ்மந்த சமீராவின் கடைசி ஓவரில் 21 ரன்களும் எடுத்து, இன்னிங்ஸை உச்சத்தில் முடித்தனர்.
தடுமாற்றம்
டெல்லி கேப்பிடல்ஸ் ஆரம்பம் முதலே தடுமாற்றம்
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது வழக்கமான கேப்டன் அக்சர் படேலை இழந்ததால், தொடக்கத்திலிருந்தே தடுமாறியது.
மிட்செல் சாண்ட்னரின் சுழற்பந்து வீச்சு 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது, இதில் மிடில் ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகள் அடங்கும்.
ஜஸ்ப்ரீத் பும்ராவும் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டெல்லி அணியில் சமீர் ரிஸ்வி மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள்எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த உறுதியான வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.