Page Loader
கேமரூன் கிரீனை கழற்றி விட திட்டமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ்
கேமரூன் கிரீனை கழற்றி விட திட்டமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ்

கேமரூன் கிரீனை கழற்றி விட திட்டமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2023
05:30 pm

செய்தி முன்னோட்டம்

அணியில் நட்சத்திர வீரர்கள் இருந்தபோதிலும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023 இல் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் அருண் ஜெட்லி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், சீசனின் முதல் வெற்றியை பெற மும்பை இந்தியன்ஸ் உள்ளூர் வீரர்களை அதிகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதிக போட்டி நிலவும் லீக்கில் இந்திய வீரர்கள் பந்துவீசவில்லை என்றால் நிலைத்தன்மையை பெறுவது மிகவும் கடினம் எனும் நிலையில், அதுவே மும்பையை ஆட்டிப்படைக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப்-ஆர்டர் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை வழங்கத் தவறிவிட்டது.

WIll mumbai indians leave cameron green against delhi capitals

அணியை மாற்றியமைக்க ரோஹித் சர்மா திட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணியால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்தாலும், பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரை கழற்றி விட அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இளம் திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் போன்ற சிலர் மட்டுமே இதுவரை நடந்த போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவில் கவனம் ஈர்த்துள்ளனர். இதே போல் மறுபுறம் டெல்லி கேப்பிடல்சும் முதல் வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழலில், மும்பை இந்தியன்ஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.