NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி!
    வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி

    விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 09, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, 2 வருடம் கழித்து இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    புதன்கிழமை (பிப்ரவரி 8) வயல்களில் டிராக்டரை ஓட்டும் வீடியோவை தோனி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    வீடியோவுடன், "புதியதைக் கற்றுக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்தது" என்று தோனி கருத்து பதிவிட்டுள்ளார். வீடியோவில், தோனிக்கு இரண்டு விவசாயிகள் விவசாய வயல்களை உழ கற்றுக் கொடுப்பதைக் காணலாம்.

    எம்.எஸ். தோனி பைக் மற்றும் கார்களின் மீது அதிக பிரியர் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், அவர் புதிதாக விவசாயி அவதாரம் எடுத்து வயல்களில் டிராக்டர் ஓட்டும் வீடியோ ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

    Instagram அஞ்சல்

    வைரலாகும் தோனியின் ரீல்

    Instagram post

    A post shared by mahi7781 on February 9, 2023 at 1:28 pm IST

    எம்.எஸ்.தோனி

    கிரிக்கெட்டில் தோனியின் செயல்பாடு

    எம்.எஸ்.தோனி தனது கடைசி ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக இந்த ஆண்டு விளையாட உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தவிர்த்த சமயங்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    மேலும் அவர் சமீபத்தில் மீண்டும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார்.

    கடந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை திரும்பப் பெற்ற பிறகு, ஐபிஎல் 2023இல் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை எம்எஸ் தோனி வழிநடத்த உள்ளார்.

    ஐபிஎல் 2022இல் கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தைப் பிடித்த பிறகு ஏமாற்றமளிக்கும் சீசனில் இருந்து சிஎஸ்கே மீண்டு வருவதைப் பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    எம்எஸ் தோனி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கிரிக்கெட்

    நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி! தொடரையும் வென்றது இந்தியா! டி20 கிரிக்கெட்
    இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 : ஷுப்மன் கில்லால் முறியடிக்கப்பட்ட சாதனைகள்! டி20 கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : பயிற்சி ஆட்டத்திற்கு பதிலாக ஆர்சிபி உதவியுடன் ஆஸ்திரேலிய அணி ஆயத்த முகாம்! டெஸ்ட் கிரிக்கெட்
    4000+ ரன்கள், 100+ விக்கெட்டுகள்! டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா புது சாதனை! டி20 கிரிக்கெட்

    எம்எஸ் தோனி

    ரசிகரின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போடும் எம்.எஸ்.தோனி - வைரல் வீடியோ இந்தியா
    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்! ஐசிசி விருதுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025