முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்!
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, தனது இடது முழங்கால் வலிக்காக மும்பையில் உள்ள விளையாட்டு எலும்பியல் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவார் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் புதன்கிழமை (மே 31) தெரிவித்தார்.
தோனி முழு ஐபிஎல் சீசனையும் இடது முழங்காலில் கடுமையான வலியுடனேயே விளையாடினார்.
கீப்பிங் செய்யும் போது அவர் சரியாகத் தோன்றினாலும், பேட்டிங் செய்யும்போது இது வெளிப்படையாகவே தெரிந்தது.
இந்நிலையில் தோனியின் காயம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், "ஆமாம், தோனி தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கேற்ப முடிவெடுப்பார் என்பது உண்மைதான்.
அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டால், விவாதித்து முடிவெடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.
ceo kashi viswanadhan press statement
காசி விஸ்வநாதன் பேட்டியின் முழு விபரம்
அடுத்த சீசனில் விளையாட வேண்டாம் என்று தோனி முடிவு செய்தால், மினி ஏலத்திற்கு 15 கோடி ரூபாய் பர்ஸை விடுவிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என கேட்டதற்கு, "நாங்கள் அந்த நிலைக்கு வரவில்லை என்பதால், நாங்கள் அந்த வழிகளைப் பற்றி சிந்திக்கவில்லை.
இது குறித்து முற்றிலுமாக தோனி மட்டுமே முடிவெடுப்பார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அப்படி எதுவும் நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம்." என்று விஸ்வநாதன் கூறினார்.
ஐந்தாவது ஐபிஎல் டிராபிக்குப் பிறகு சிஎஸ்கே தலைவர் என் சீனிவாசன் வீரர்களிடம் உரையாற்றினாரா என்றும், கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளதா என்றும் கேட்கப்பட்டதற்கு தாங்கள் ஒருபோதும் கொண்டாட்டங்களை நடத்துவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.