Page Loader
42வயதில் இவ்ளோ எனர்ஜியா? வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி
வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி

42வயதில் இவ்ளோ எனர்ஜியா? வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2023
12:29 pm

செய்தி முன்னோட்டம்

40 வயதை தாண்டிய பிறகும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் எம்எஸ் தோனி, 2023 சீசனுக்கான பட்டத்தையும் வென்று கொடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் ஐந்தாவது ஐபிஎல் பட்டத்திற்குப் பிறகு, தோனி தனக்கு உடல் ரீதியாக மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், ரசிகர்கள் தன்மீது காட்டும் அன்பிற்காக ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பேன் என்று கூறினார். இதையடுத்து, சமீபத்தில் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிய எம்எஸ் தோனிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது ஜிம்மில் பயிற்சிக்கு பிறகு எம்எஸ் தோனி அதிக எனர்ஜியுடன் நடந்து செல்லும் சமீபத்திய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

எம்எஸ் தோனியின் வைரல் காணொளி