அடுத்த செய்திக் கட்டுரை

"தோனிக்கு இவ்ளோ பெரிய பைசெப்ஸா?" : ஆச்சரியப்படும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 17, 2023
05:59 pm
செய்தி முன்னோட்டம்
எம்.எஸ்.தோனி வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடருக்கு முன்னதாக தனது உச்சகட்ட உடற்தகுதியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே அணியின் பயிற்சி முகாமில் சேர்ந்தார்.
எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசன் எனக் கூறப்படுவதால், அவரது அனைத்து அசைவுகளும் வைரலாகி வருகின்றன.
தோனி பயிற்சியின்போது மிகப்பெரிய பைசெப்ஸை கொண்டிருப்பதை ஹர்ஷா போக்லே சுட்டிக்காட்டி, அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் கடந்த சீசன்களை விட தற்போது உச்சகட்ட உடற்தகுதியுடன் இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
தோனியின் உடற்தகுதி ட்வீட்
Never seen Dhoni as bulked up as this. Power game this #TataIPL? pic.twitter.com/6A561MpWbb
— Harsha Bhogle (@bhogleharsha) March 17, 2023