ஐபிஎல் 2023 சீசனுடன் ஓய்வு பெறுவது உறுதி? Hint கொடுத்த எம்எஸ் தோனி
செய்தி முன்னோட்டம்
முன்னோடியில்லாத வகையில், ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியுடன் காட்சியளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த எம்எஸ் தோனி, "நான் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். தற்போது கொல்கத்தா ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் சிஎஸ்கே ஜெர்சியில் வந்துள்ளனர்.
அவர்கள் விடை கொடுக்க வந்துள்ளார்கள் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த முறை கேகேஆர் ஜெர்சியில் வருவார்கள்." என்று தெரிவித்தார்.
தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் எனக் கூறப்பட்டாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்நிலையில், தோனியின் கருத்து அவரது ஓய்வை உறுதி செய்யும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்
I will just say thanks for the support, they came in big numbers. Most of these guys will come in a KKR jersey next time. They are trying to give me a farewell, so thanks a lot to the crowd - #THALA
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2023