'நான் ரெடிதான் வரவா, அண்ணன் நான் இறங்கி வரவா' ; மாஸ் காட்டிய எம்எஸ் தோனி
கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் தனியாக படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய தோனி, தனது முதல் படமான LGM பட ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். மேலும், பட வெளியீட்டுக்காக சென்னையில் முகாமிட்டு பல்வேறு பிரபலங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இரண்டு இளம் ரசிகர்களுடன் தோனி இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பின்னணியில் நடிகர் விஜயின் "நான் ரெடிதான் வரவா, அண்ணன் நான் இறங்கி வரவா" என்ற பாடல் ஒலிக்க, ரசிகர்களை போலவே கையை தூக்கி காட்டினார். அவரது செய்கையால் இரண்டு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.