Page Loader
பாரா படகுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் பூஜா ஓஜா
பாரா படகுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் பூஜா ஓஜா

பாரா படகுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் பூஜா ஓஜா

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2023
06:46 pm

செய்தி முன்னோட்டம்

36 வயதான இந்தியா பாரா விளையாட்டு வீராங்கனை பூஜா ஓஜா உஸ்பெகிஸ்தானில் நடக்க உள்ள ஆசிய கோப்பை பாரா படகுப் போட்டிக்காக தயாராகி வருகிறார். பாரா படகுப் போட்டியில் இந்தியாவுக்காக முதல் சர்வதேச பதக்கம் வென்று எந்தவொரு திறமையையும் வளர்த்துக் கொள்ள ஊனம் ஒரு தடையல்ல என்பதை இவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். இதுவரை நான்கு சர்வதேச பதக்கங்களையும் 10 தேசிய பதக்கங்களையும் வென்றுள்ளார். பிந்த் மாவட்டத்தில் வசிக்கும் பூஜா ஓஜா ஏழை விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சுமார் 80 சதவீத ஊனம் இருந்த போதிலும், 2022ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Pooja ojha interview

பூஜா ஓஜா அளித்த பேட்டியின் முழு விபரம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பேட்டியில், "எனது மூத்த சகோதரர் சிறந்த விளையாட்டு வீரர். முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டார். அவரது கனவை நனவாக்கும் நிலையை இறைவன் எனக்கு கொடுத்துள்ளார். தற்போது போபாலில் மயங்க் சாரின் வழிகாட்டுதலின் கீழ் 2019 இல் பாரா உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடி 10வது ரேங்க் பெற்றேன். அதன் பிறகு, தாய்லாந்தில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 2022 இல் கென்யாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றேன். இப்போது ஆசிய சாம்பியன்ஷிப்பிற்காக போபாலில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்." என்றார்.