Page Loader
சைக்கிளிங் வீராங்கனையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின் 
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 13.99 லட்சம் மதிப்பிலான மிதிவண்டி

சைக்கிளிங் வீராங்கனையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின் 

எழுதியவர் Arul Jothe
May 23, 2023
04:14 pm

செய்தி முன்னோட்டம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருபவர் செல்வி. தபித்தா. இவர் ஒரு சைக்கிளிங் வீராங்கனை ஆவார். இவர் பல மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, பதங்கங்களை வென்று வருகிறார். ச மீபத்தில், அசாம் மாநிலத்தியில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், 27-வது தேசிய அளவிலான மகளிர் சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார். இதனிடையே, தபித்தா, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் இருந்தால், தன்னால் பயிற்சி பெற்று, பதக்கங்களை குவிக்க முடியும் என கூறினார். அதற்காக, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

Cycling

சைக்கிளிங் வீராங்கனை

இதனை அறிந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக மாணவியின் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை' சார்பில், ரூபாய் 13.99 லட்சம் மதிப்பிலான அந்த பிரத்யேக மிதிவண்டி வழங்கப்பட்டது. Argon 18 PRO (Complete bike) என்று அழைக்கப்படும் மிதிவண்டியை தனக்கு வழங்கியதற்காக தனது நன்றியை தெரிவித்ததோடு, "சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றிப்பெற்று நம் தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடி தருவேன்" என்றும் ஷா தபித்தா தெரிவித்துள்ளார்.