அடுத்த செய்திக் கட்டுரை

மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 13, 2023
04:07 pm
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 147 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், 28.15 சராசரியில் 2,956 ரன்களைக் குவித்து, இந்தியாவின் அதிக ரன்களை எடுத்தவராக உள்ளார்.
இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமான அணியாக வலம் வரும் நிலையில், மகளிர் ஐபிஎல்லிலும் இது பிரதிபலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
மகளிர் ஐபிஎல் ஏலம்
Say hello to @mipaltan's first signing at the #WPLAuction - @ImHarmanpreet 👋#WPLAuction pic.twitter.com/eS7PxzYfFM
— Women's Premier League (WPL) (@wplt20) February 13, 2023