
ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்!
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இதன் மூலம் அவர் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய உள்ளார்.
நடாலி ஸ்கிவர் இதுவரை 104 டி20 போட்டிகளில் 112.81 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,999 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 10 அரைசதங்கள் அடங்கும்.
அவரது சிறந்த ஸ்கோர் 82 ஆகும். மேலும் பந்துவீச்சு மூலம், அவர் 6.46 என்ற எகானமி விகிதத்தில் 78 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 1900+ ரன்கள் மற்றும் 75+ விக்கெட்டுகளை எடுத்த டாப் 3 வீராங்கனைகளில் நடாலி ஸ்கிவரும் ஒருவர் ஆவார்.
ட்விட்டர் அஞ்சல்
மகளிர் ஐபிஎல் ஏலம்
.@mipaltan have @natsciver on board 👏 👏
— Women's Premier League (WPL) (@wplt20) February 13, 2023
Base Price: INR 50 Lac
Goes For: INR 3.20 Crore#WPLAuction pic.twitter.com/2cY60EjQpI