50வது முறையாக ஃபார்முலா 1 வென்று வரலாறு படைத்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
ரெட்புல்லின் டிரிபிள் உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 50வது முறையாக ஃபார்முலா 1 போட்டியில் வெற்றியைப் பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடந்த யுஎஸ் கிராண்ட் பிரிக்ஸில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். யுஎஸ் கிராண்ட் பிரிக்ஸில் இது அவருக்கு 15வது வெற்றியாகும். மேலும் இந்த வெற்றியானது ஆஸ்டின் சர்க்யூட் ஆஃப் தி அமெரிக்காஸில் வெர்ஸ்டாப்பனின் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியாகும். இதற்கிடையே, போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்த ஃபெராரியின் சார்லஸ் லெக்லெர்க், காரின் தரைக்குக் கீழே உள்ள கட்டாய மரப் பலகையை அதிகமாக கொண்டிந்ததற்காக விலக்கப்பட்டார்.
ஃபார்முலா 1 போட்டியில் ஐந்தாவது வீரர்
யுஎஸ் கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியின் மூலம் ஃபார்முலா 1 வரலாற்றில் 50 வெற்றிகளை பெற்ற ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலில் லூயிஸ் ஹாமில்டன் 103 வெற்றிகளுடன் முதலிடத்திலும், மைக்கேல் ஷூமேக்கர் 91 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து விட்டல் செபாஸ்டியன் 53 வெற்றிகளுடனும், அலன் ப்ரோஐஸ்ட் 51 வெற்றிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இதற்கிடையே நடப்பு சீசனில் வெர்ஸ்டெப்பான் சார்ந்த ரெட்புல் ரேசிங் 704 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. மெர்சிடிஸ் 358 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபெராரி 327 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மெக்லாரன் மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.