ஐபிஎல் 2023 : நாடு திரும்புகிறாரா மார்க் வுட்? சிக்கலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டின் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால், போட்டியில் கடைசி கட்டங்களில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மார்க் வுட்டின் மனைவி சாரா கர்ப்பமாக உள்ள நிலையில், மே இறுதியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். இதனால் அவர் இங்கிலாந்து கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அவர் இந்த சீசன் முழுவதும் பங்கேற்பார் என அணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஐபிஎல் 2023 தொடரில் உடல்நலக்குறைவு காரணமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 தொடரில் மார்க் வுட் செயல்திறன்
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் உட்பட எல்எஸ்ஜி நான்கு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்தார். இதற்கிடையே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை பொறுத்தவரை, மார்க் வுட் இங்கிலாந்து திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டாலும், மாற்று வீரராக நவீன் உல்-ஹக்கை விளையாடும் 11 பட்டியலில் சேர்த்து அவரை தயார்படுத்தி வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சர்வதேச அட்டவணையைப் பொறுத்தவரை, அவர்கள் ஜூன் 1 முதல் அயர்லாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இதனால் ஐபிஎல்லில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் முன்கூட்டியே நாடு திரும்புவார்கள் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே அழைக்க விரும்பவில்லை.