
ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி!
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் இரு அரை சத்தத்தால், 20 ஓவர்களில் 167/5 ரன்களை எட்டியது.
டி20 போட்டிகளில் ஸ்மிரிதி மந்தனாவின் 20வது அரைசதம் இதுவாகும். மேலும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இது 9வது அரைசதமாகும்.
இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணிக்கு தொடர்ந்து 2வது வெற்றி
தற்போது நடைபெற்று வரும் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியினருக்கு இடையே நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரின், இந்திய மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் நிகர ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் +2.075 புள்ளிகளுடன் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.