
ஜெயதேவ் உனட்கட்டிற்கு பதிலாக இளம் வீரர் சூர்யன்ஷ் ஷெட்ஜை ஒப்பந்தம் செய்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இன் எஞ்சிய போட்டியில் காயமடைந்த ஜெய்தேவ் உனட்கட்டுக்கு பதிலாக சூர்யன்ஷ் ஷெட்ஜை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் வியாழக்கிழமை (மே 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யன்ஷ் ஷெட்ஜை அவரது அடிப்படை விளையான ரூ.20 லட்சத்துக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னதாக, இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வலைப் பயிற்சியின் போது, தோளில் விழுந்ததில் காயம் ஏற்பட்டதால் அணியிலிருந்து விலகியுள்ளார்.
இதற்கிடையே ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜெயதேவ் உனட்கட் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 NEWS 🚨
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
Suryansh Shedge replaces injured Jaydev Unadkat at @LucknowIPL. #TATAIPL
Details 🔽 https://t.co/5Bxsx0Yot7