Page Loader
பெங்களூருவில் வீடு வேண்டும்! ஆர்சிபி போட்டியில் ரசிகரின் வித்தியாசமான போஸ்டர் வைரல்
பெங்களூருவில் வீடு வேண்டும்.. ரசிகரின் வித்தியாசமான போஸ்டர் இணையத்தில் வைரல்

பெங்களூருவில் வீடு வேண்டும்! ஆர்சிபி போட்டியில் ரசிகரின் வித்தியாசமான போஸ்டர் வைரல்

எழுதியவர் Siranjeevi
Apr 17, 2023
01:23 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் கடந்த போட்டியின் போது பெங்களூரு அணியும் டெல்லி அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடினார்கள். இதில் ஆர்சிபி அணி வெற்றியை பெற்றது. அப்போது, சின்னசாமி மைதானத்தில் ரசிகர் ஒருவர் கையில் ஏந்திய போஸ்டர் ஒன்று வைரலானது. அதில், பெங்களூருவில் ஒரு வீட்டை வாடகை எடுக்க சிரமப்படும் விதமாக நபர் ஒருவர், "இந்திராநகரில் 2 BHK வீடு தேடுகிறேன்" என கையில் போஸ்டர் ஏந்தியபடி நின்றுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாக ஆரம்பித்தது. இதுமட்டுமின்றி ரசிகர்கள் பலர் வித்தியாசமான போஸ்டரை கையில் ஏந்தியபடி வந்தனர். இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. அவருக்கு நல்ல வீடு கிடைக்கும் என கூறி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post