
சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி
செய்தி முன்னோட்டம்
இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை முன்னாள் பிஎஸ்ஜி முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
பென்ஃபிகா கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி தனது கர்லிங் ஸ்டிரைக் மூலம் எர்லிங் ஹாலண்ட் மற்றும் அலெஜான்ட்ரோ கிரிமால்டோ ஆகியோரின் சில அபாரமான ஸ்டிரைக்குகளை முறியடித்து இந்த விருதை வென்றார்.
இதற்கிடையே, பிஎஸ்ஜி உடனான தனது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல், தனது கால்பந்து கிளப் வாழ்க்கையில் முதல் முறையாக ஐரோப்பாவிலிருந்து விலகிச் சென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் மேஜர் லீக் போட்டியில் விளையாட இண்டர் மியாமியில் இணைவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தனது இளம் வயது கிளப்பான பார்சிலோனாவுக்கு அணியின் நிதி சிக்கல்கள் காரணமாக மீண்டும் திரும்ப முடியாததால், மெஸ்ஸி அமெரிக்காவுக்குச் சென்றார்.
ட்விட்டர் அஞ்சல்
லியோனல் மெஸ்ஸிக்கு சிறந்த கோல் விருது
The Goal of the Tournament results are in... 🥁
— UEFA Champions League (@ChampionsLeague) June 30, 2023
Congrats, Leo Messi! 👏#UCLGOTT | @Heineken pic.twitter.com/I4JDZF9xN1