'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி
சர்வதேச கால்பந்து போட்டிகளில், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை, மூன்றாவது முறையாக, உலகக் கோப்பையை, தனது அணிக்காக வென்று தந்த நாயகன், மெஸ்ஸியும் இதை வழிமொழிந்தார். பெனால்டி ஷூட் அவுட்டில், பிரான்ஸை அர்ஜென்டினா வெல்வதற்கு, இவரின் இரண்டு கோல்கள்களும் முக்கிய காரணம். போட்டியின் வெற்றிக்கு பிறகு, அவரிடம் இது பற்றி கேட்ட போது, "இல்லை, நான் அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. நான் தொடர்ந்து சாம்பியனாக விளையாட விரும்புகிறேன்," என்று மெஸ்ஸி கூறினார். "இந்த வெற்றி தரும் உணர்வை அனுபவிக்க வேண்டும். கடவுள் எனது வேண்டுதல்களை நிறைவேற்ற போகிறார் என உணர்ந்தேன். இப்போது அவரது ஆசியை நான் அனுபவிக்க வேண்டும்."
லியோனல் மெஸ்ஸி
நிபுணர்களின் கூற்றுப்படி, மெஸ்ஸி, உலக கோப்பை வரலாற்றிலேயே, ஒரே போட்டியில் உள்ள ஐந்து சுற்றுகளிலும் கோல் அடித்த முதல் நபர் ஆவார் - குழு நிலை, 16 சுற்று, கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி. மேலும், மெஸ்ஸி (35y 177d), கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில், கோல் அடித்த இரண்டாவது வயதான வீரர் ஆவார். 1958 இல், பிரேசிலுக்கு எதிராக விளையாடிய ஸ்வீடன் வீரர், நில்ஸ் லீட்ஹோம்(35y 264d) முதலிடத்தில் உள்ளார். ஊடக செய்திகளின்படி, உலக கோப்பையில் (1966 முதல்) விளையாடிய வீரர்களில், மெஸ்ஸியின் 21 கோல் ஈடுபாடுகள் (G13 A8) தான் அதிகம். அர்ஜென்டினா, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல காரணம் மெஸ்ஸி.