
இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி சேர உள்ளதாக தகவல்! மேஜர் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க கால்பந்து கிளப்பில் லியோனல் மெஸ்ஸி சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, அமெரிக்காவின் முதன்மையான கால்பந்து லீக் போட்டியான மேஜர் லீக் சாசரில் விளையாடும் இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி சேர உள்ளார்.
ஃபோர்ட் லாடர்டேலில் மேஜர் லீக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஜூலை 21அன்று இன்டர் மியாமிக்காக அவர் விளையாடுவார்.
இதனால் தங்கள் சொந்த மண்ணில் லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை காண விரும்பி ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க அலைமோதியதால், டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
செவ்வாயன்று (ஜூன் 6) அந்த கேமிற்கான டிக்கெட்டுக்கான மிகக் குறைந்த விலை வெறும் $29 என இருந்த நிலையில், புதன்கிழமை விலை 1,034% அளவிற்கு உயர்ந்து $329 ஆக இருந்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Lionel Messi confirms that he is joining Inter Miami 🌴 pic.twitter.com/wLWsVBAFlD
— ESPN FC (@ESPNFC) June 7, 2023