அமெரிக்க கால்பந்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்று மெஸ்ஸி சாதனை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை தங்கக் காலணி (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். இன்டர் மியாமி அணியின் நட்சத்திர முன்கள வீரரான மெஸ்ஸி, நடப்பு 2026 வழக்கமான பருவத்தில் 26 கோல்களை அடித்து இப்பட்டத்தை உறுதி செய்துள்ளார். சார்லோட் எஃப்சி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்த போதிலும், சக வீரர்களை விட அதிக கோல்கள் அடித்திருந்த மெஸ்ஸி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
புள்ளியியல் ஆதிக்கம்
மெஸ்ஸியின் பங்களிப்பு
நடப்பு பருவத்தில் இன்டர் மியாமி அணி அடித்த 80 கோல்களில் மெஸ்ஸியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது.
39 வயதான மெஸ்ஸி 26 கோல்கள் அடித்ததுடன், சக வீரர்கள் கோல் அடிப்பதற்கு 17 முறை உதவி புரிந்துள்ளார் (Assists).
மேலும் இலக்கை நோக்கி 76 முறை துல்லியமாகப் பந்தை அடித்து லீக் அளவிலான புள்ளிவிவரங்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த பருவத்தில் 29 கோல்களை அடித்திருந்த மெஸ்ஸி, இந்த ஆண்டும் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தித் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் கோல் வேட்டையில் உச்சம் தொட்டுள்ளார்.
அடுத்த கட்ட சவால்
பிளே-ஆஃப் சுற்று
கிழக்கு பிராந்தியப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள இன்டர் மியாமி அணி, அடுத்து தொடங்கும் பிளே-ஆஃப் சுற்றில் கொலம்பஸ் குரூ அணியை எதிர்கொள்கிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்தவொரு அணியும் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்எஸ் கோப்பையை வென்றதில்லை என்பதால், பட்டத்தைத் தக்கவைப்பது மியாமிக்கு முக்கியச் சவாலாக உள்ளது.
இதற்கிடையே நடப்பு ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான எம்விபி (MVP) விருதை மூன்றாவது முறையாக வெல்லும் போட்டியிலும் மெஸ்ஸி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.