
நடிகராக புது அவதாரம் எடுத்த லியோனல் மெஸ்ஸி
செய்தி முன்னோட்டம்
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உள்நாட்டு வெப் சீரீஸில் அறிமுகமாகியுள்ளார்.
'லாஸ் ப்ரொடெக்டர்ஸ்' என்ற அந்த தொடரில் மெஸ்ஸி 5 நிமிடங்கள் வருகிறார். மெஸ்ஸி நடித்துள்ள வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லாஸ் ப்ரொடெக்டர்ஸ் தொடரை ஸ்டார்+ பிளாட்ஃபார்மில் பார்க்கலாம். மேலும் இது 6.5 ஐஎம்டிபி மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே அர்ஜென்டினா அணிக்காக இரண்டு நட்பு ஆட்டங்களில் விளையாடியுள்ள லியோனல் மெஸ்ஸி, ஐரோப்பிய கால்பந்து அணியான பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகி அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.
ஜூலை 21 அன்று மேஜர் லீக் கோப்பை போட்டியில் க்ரூஸ் அசுலுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
வெப் சீரீஸில் லியோனல் மெஸ்ஸி
#Clicks | நடிகராக அறிமுகமாகும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி!#SunNews | #LionelMessi pic.twitter.com/3qPch0DquQ
— Sun News (@sunnewstamil) June 29, 2023