
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர், லசித் மலிங்கா!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை தங்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைத்துள்ளது.
முன்னதாக, இந்த பொறுப்பை வகித்து வந்த நியூசிலாந்து ஜாம்பவான் ஷேன் பாண்டின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது லசித் மலிங்காவை அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மும்பை இந்தியன்ஸ் லசித் மலிங்காவை பந்துவீச்சு பயிற்சியாளராக இணைக்கப்பட்டுள்ளார்.
மார்க் பவுச்சர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக் குழுவில் சேருவார்." என்று தெரிவித்துள்ளது.
லசித் மலிங்கா வெளிநாட்டு லீக் கிரிக்கெட்டில் செயல்படும் எம்ஐ கேப் டவுன் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகளுக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
லசித் மலிங்காவை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்
𝗔𝗔𝗟𝗔 𝗥𝗘 𝗔𝗔𝗟𝗔 𝕊𝕃𝕀ℕ𝔾𝔸 𝗔𝗔𝗟𝗔 🤩#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan @malinga_ninety9 pic.twitter.com/vtqOGiWXT4
— Mumbai Indians (@mipaltan) October 20, 2023