கண்டனத்தை ஈர்க்கும் ICC உலகக்கோப்பை போஸ்டர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உட்பட பத்து அணித் தலைவர்களும் மும்பையின் பின்னணியில், உலக கோப்பையுடன் போஸ் கொடுத்தனர். ஆனால், ரசிகர்களை கவர்ந்திழுக்க வேண்டிய இந்த போஸ்டர், மாறாக கண்டனத்தை ஈர்த்தது. அதற்கு காரணம், இது அதிகாரப்பூர்வ கேப்டன்களின் புகைப்படம் அல்ல! உலககோப்பை தொடரில் பங்குபெறும் அணிகளின் கேப்டன்களின் உண்மையான புகைப்படத்திற்கு பதிலாக, அவை டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் பிரபலமான AI தொழில்நுட்பத்தால் ICC யும் ஈர்க்கப்பட்டது போல! அந்த புகைப்படம் செயற்கையாக உள்ளது என ரசிகர்களிடம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.