கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லிட்டன் தாஸிற்கு பதிலாக ஜான்சன் சார்லஸ் சேர்ப்பு
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வியாழன் (மே 4) அன்று ஜான்சன் சார்லஸை லிட்டன்ஸ் தாஸுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்துள்ளது.
வங்கதேச விக்கெட் கீப்பர் பேட்டரான லிட்டன் தாஸ் ஐபிஎல் 2023 தொடருக்கு மத்தியில் ஏப்ரல் 28 அன்று குடும்ப அவசரநிலை காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜான்சன் சார்லஸ் மாற்று வீரராக ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜான்சன் சார்லஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 41 டி20 போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் மேற்கிந்திய தீவுகளின் 2012 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 NEWS 🚨@KKRiders name Johnson Charles As Replacement For Litton Das.
— IndianPremierLeague (@IPL) May 4, 2023
Details 🔽 #TATAIPLhttps://t.co/YlXMvvsRhp pic.twitter.com/0Qtiiseqw4