கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
ஐபிஎல் 2023 இன் 39வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 29) இந்த மோதல் நடைபெறவுள்ளது. சீசனின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மறுபுறம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த சீசனில் தான் அறிமுகமானதால், இதுவரை இரு அணிகளும் இருமுறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளதோடு, இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியை பெற்றுள்ளது.
போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்
நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் நிதிஷ் ராணாவுக்கு இது 100வது ஐபிஎல் போட்டியாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 பவுண்டரிகளை அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 500 பவுண்டரிகள் எனும் மைல்ஸ்டோனையும், 5 சிக்சர்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 600 சிக்சர்கள் எனும் மைல்ஸ்டோனையும், 5 விக்கெட்டுகளை எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனையும் எட்டுவார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 3விக்கெட்டுகள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்டுவார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் லாக்கி பெர்குசன் 3விக்கெட்டுகள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் எனும் மைல் ஸ்டோனை எட்டுவார்.