
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புதிய வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரேமன் ரெய்பர் நீக்கப்பட்டு, ஆஃப்-ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது அவரது அறிமுக டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏற்கனவே ரகீம் கார்ன்வால் மற்றும் ஜோமெல் வாரிக்கன் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், சுழல் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக கெவின் சின்க்ளேர் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆஃப்-ஸ்பின்னர் 12 விக்கெட் எடுத்தது தான், வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது போட்டியில் அதே ஃபார்முலாவை கையில் எடுக்க உள்ளது.
west indies updated squad
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்
கெவின் சின்க்ளேர் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்காக ஏழு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்டுகளையும், ஆறு டி20 போட்டிகளில் பங்கேற்று நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
3வது இடத்தில் பேட் செய்த ரெய்பர் இல்லாததால், மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒரு இடம் முன்னதாக பேட் செய்வார்கள். சின்க்ளேர் 7வது இடத்தில் ஹோல்டருக்கு கீழே பேட்டிங் செய்வார்.
இருப்பினும், கிர்க் மெக்கென்சி களமிறங்கினால் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட், ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், தேஜ்நரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சார்ரி ஜோசப், கிர்க் மெக்ரிக் மெக்ரிக் கெவின் சின்க்ளேர், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன்.