
36 ஆண்டுக்கு பின் மணிரத்தினத்துடன் இணையும் கமல்! படிப்பிடிப்பு எப்போது?
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் பட வெற்றிக்கு பின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், இந்த படத்திற்கு பின் கமல் மணிரத்னம் இயக்கத்தில் கேஎச்234 படத்தில் நடிக்க உள்ளார்.
அதாவது 36 ஆண்டுக்கு பின் கமல் மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளார்.
இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். எனவே இப்படத்தில் நயன் முடிவு ஆனால் முதன் முறையாக கமலுடன் இணைவார்.
மேலும் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#CinemaUpdate | 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‘நாயகன்’ கூட்டணி!#SunNews | #Kamal234 | #Manirathnam | @ikamalhaasan | @arrahman pic.twitter.com/3dHDeRTkPy
— Sun News (@sunnewstamil) April 20, 2023