ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு! ஜானி பேர்ஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை!
வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பங்கேற்க, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருக்கும் ஜானி பேர்ஸ்டோ ஐபிஎல்லில் பங்கேற்க முடியாமல் போனால், அது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஐபிஎல் 2022 ஏலத்தில் பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கி இருந்தது. முன்னதாக ஆகஸ்ட் 2022 முதல், ஜானி பேர்ஸ்டோ எந்த வகையான தொழில்முறை கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்தால் அவதிப்படும் ஜானி பேர்ஸ்டோ
செப்டம்பர் 2022 இல் ஒரு ஜானி பேர்ஸ்டோ காயம் அடைந்தார். அதன் பின்னர் அவருக்கு கால் மற்றும் கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் அடுத்த இரண்டு வாரங்களில் விளையாட தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் ஆஷஸ் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையில் அவரது பங்களிப்பு அவசியம் என்பதால் உடற்தகுதியைப் பணயம் வைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதனால் அவரை ஐபிஎல்லுக்கு எந்த காரணம் கொண்டும் அனுப்பாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.