Page Loader
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; காரணம் இதுதான்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; காரணம் இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 02, 2023
08:05 pm

செய்தி முன்னோட்டம்

டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பெயரை பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான கிரிக்பஸ் அறிக்கையின்படி, மொத்தம் 1,166 வீரர்கள் தங்கள் பெயரை ஏலத்திற்கு பதிவு செய்துள்ள நிலையில், ஆர்ச்சர் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. முன்னதாக, ஆர்ச்சர் கடந்த மாதம் மும்பை இந்தியன்ஸால் ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டார். அவரை விடுவித்ததற்கு முக்கிய காரணம் அவரது காயம்தான் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த சீசனில் ஐந்து ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய ஆர்ச்சர், அதில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அதே நேரத்தில் ஓவருக்கு சராசரியாக 9.5 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

Why Jofra Archer not register name for IPL 2024 Auction

ஏலத்திற்கு பெயரை கொடுக்காததன் காரணம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஏன் ஆர்ச்சர் (27) தனது பெயரை ஏலத்திற்கு வழங்கவில்லை என்று பதிலளிக்கவில்லை. ஆனால் அவரது காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் அவர் நிச்சயம் விளையாட மாட்டார் என ஐபிஎல் அணிகள் மத்தியில் ஏற்கனவே பேச்சு அடிபட்டது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது இங்கிலாந்தின் ரிசர்வ் வீரராக ஆர்ச்சர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்ற சிறந்த உலகக் கோப்பை வீரர்கள் தங்கள் பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளதால், அவர்களை வாங்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.